Sri Prasanna Venkatesa Perumal Temple Dindigul Muthanampatti East

                                                              Sri Prasanna Venkatesa Perumal Temple, Dindigul
                                                                                                Dindigul - Palani Road,Muthanampatty ,Tamil Nadu624622


தலவரலாறு : 


  • உங்களுக்கு, எனக்கு, எல்லாருக்கும்....நல்லா அறிமுகமானவர், "அரி "முகமானவர் தான்!  " பெருமாள் " என்று நாட்டு வழக்காக அழைக்கும் திருமால் தான் இன்னொரு தமிழ்க் கடவுள் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.
  • தாயாருக்கு என்று தனி சன்னதி இல்லை.  
  • பெருமாளின் மார்பில் தாயார் ஸ்ரீதேவி, பூதேவியுடன்  அமர்ந்து அருள்பாலிப்பதே அதற்கு காரணம்.  

ஆலயம் தொழுவது சாலவும் நன்று…கோபுர தரிசனம் கோடி புண்ணியம்…

புணருத்தாரணம் பூர்வ புண்ணியம்… கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்… 

என்றெல்லாம் நம் முன்னோர்கள் கூறி கேட்டிருக்கிறோம். அத்தகைய புகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன.

மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.  இந்த இணையதளத்தின் மூலம் இதுவரை கும்பாபிஷேகம் கண்ட கோயில்களையும், கும்பாபிஷேகக் காட்சிகளையும் எல்லோரும் கண்டு இன்புற்றிருக்க வரிசைப்படுத்தி வழங்குகின்றோம். ஊர் கூடி தேர் இழுக்கவேண்டும் என்பார்கள்.. அப்படி எத்தனையோ நல்ல உள்ளங்கள் ஒன்று கூடி அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகங்களை செய்கிறார்கள். அந்த நல்ல உள்ளங்களைப் போற்றவும், அந்த மங்கலக் காட்சியை உலகோர் பார்வைக்கு வைக்கவும் இந்த முயற்சி செய்யப்பட்டிருக்கிறது. அந்த மஹா அஷ்ட பந்தன கும்பாபிஷேகங்களை நேரில் காண முடியாதவர்கள், இந்த இணையதளத்தில் கண்டு பல்லாயிரக்கணக்கானோர் பயன் பெறட்டும்.

பெருமாள் வந்த வரலாறு

  • அருள்மிகு பெருமாள் சுவாமி கோவில் சுமார் 200 ஆண்டுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது.
  • திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து பெருமாள் வந்து அமர்ந்ததாகக் கூறப்படுகிறது.
  • சுமார் 100 ஆண்டு பழைமையான இக்கோயிலில், பெருமாளின் வரலாற்றைக் கூறும் ஏடு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
  • தென்பகுதிக்கு வந்த பெருமாள் பல்வேறு இடங்களில் கோவில் கொண்டார்.
  • திருவனந்தபுரத்தில் அனந்தபத்மநாபனாகவும்,
  • திருவட்டாரில் ஆதிகேசவ பெருமாளாகவும் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
  • பல்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டு முத்தனம் பட்டி புதூர் - கிழக்கில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் நிலை
  • கொண்டதாக கருதப்படும் இடம்தான் இன்று கோவில் கொண்டுள்ள‌ இடம்.
  • வளர்ந்து வரும் இந்த ஊரில் விவசாயிகள்,தொழிலாளர்கள் உள்ள‌னர்.
  • ஊரின் கிழக்கு பகுதியில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயம் அமைந்துள்ள‌து.
  • இங்கு நின்ற கோலத்தில் பெருமாள் காட்சி அளிக்கிறார்.
  • திருப்பதியில் காட்சி தருவது போன்று இங்கு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் காட்சி தருவது சிறப்பு.
  • இங்கு சனிக்கிழமைதோறும் ஆன்மீக வழிபாடுகள் நிறைந்த பூஜைகள் நடக்கின்றன.
  • ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் உகந்த ஒவ்வொரு சனிக்கிழமையும் பஜனைப் பாடல்கள், கிருஷ்ண லீலைகள் போன்றவற்றைப் பாடிக் கொண்டாடுகின்றனர்.
  • ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். எனவே இம்மாதத்தில், தவறாமல் ஆன்மீக வழிபாடுகள் நிறைந்த பூஜைகளைச் செய்து,தெய்வங்கள் மற்றும் முன்னோர்களின் நல்லருளும், நல்லாசியும் பெறலாம்.
  • மக்கள் பலரும் புரட்டாசி மாதம் முழுவதும் உணவு கட்டுப்பாட்டுடன் விரதம் இருப்பார்கள்.
  • தெய்வத்தை மனதில் நிறுத்தி பூஜை செய்து இருக்கும் விரதங்கள் உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆன்மாவுக்கும் அருமருந்து ஆகும்.
  • புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் இறைச்சி உண்பதை தவிர்த்து விடுவர். 
  • பாவ வினைகளால் உண்டான பிணி, தடை, தோஷம், கண் திருஷ்டி போன்றவை விலகவும் கர்ம வினைகள் தொடராமல் இருக்கவும் ஆயுள், ஆரோக்கியம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்கியம் கிடைக்கவும் விரத முறைகள் காலம்
  • காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றனர். 


முப்பாட்டனார், பாட்டனார், தாத்தா, ௮ப்பா, நாங்கல் மற்றும் வம்சாவளி-கள் மேலூம் எங்களது பிள்ளை-கள், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்தொடர்ந்து...

Comments